• Apr 30 2024

தளபதி 68 படத்தின் கதாநாயகி யார் தெரியுமா?- இந்த டுவிஸ்டை யாரும் எதிர்பார்க்கலையே

stella / 6 months ago

Advertisement

Listen News!


நடிகர் விஜய்யின் லியோ படம் வரும் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தின் இசை வெளியீடு கடந்த மாதம் 30ம் தேதி சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். வாரிசு படம் போல குடும்பக்கதை தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் பூஜை அண்மையில் நடந்துள்ளது. இதில்  விஜய், பிரசாத், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.


இதில் அப்பாவாக நடிக்கும் விஜய்க்கு சினேகா ஜோடியாகவும், மகனாக நடிக்கும் விஜய்க்கு மீனாட்சி சௌத்ரி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் விஜய் ஆண்டனி நடித்த கொலை படத்தில் மாடலாக நடித்தவர். நாளை முதல் பாடல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தில், 25 வயது இளைஞனாக விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சர்வதேச தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, விஜய்யின் ஸ்டண்ட் மற்றும் நடனக் காட்சிகள் படமாக்க இருப்பதாகவும், இதற்காக உலக அளவில் பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்கள் பயன்படுத்த இருப்பதாகவும், அதிரடி ஸ்டாண்ட் காட்சிகளை 20 கேமராக்கள் கொண்டு படமாக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement