• May 19 2024

விக்ரம் பட சக்சஸ் மீட் க்கு சமைத்த பிரபல இளம் ஹீரோ யார் தெரியுமா?- அட இது தெரியாமல் போச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமல்ஹாசன், பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஒரு வெற்றிப் படமே "விக்ரம்". பெரிய எதிர்பார்ப்புகளிற்கு மத்தியில் உருவான இப்படம் எதிர்பார்த்ததை விடவும் அதிகளவான வசூல் சாதனைகளை அள்ளிக் குவித்து வருகின்றது.

ஜூன் 03-ஆம் திகதி வெளியான இத்திரைப்படமானது வசூல் ரீதியாக மட்டும் இல்லாது விமர்சன ரீதியாகவும் உலகம் பூராகவும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் சக்சஸ் மீட் ஆனது சமீபத்தில் இடம் பெற்றது. இந்த வெற்றி கொண்டாட்டத்தில் கமல் ஹாசன், லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின், அனிரூத் மற்றும் பல திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் இவர்கள் அனைவரும் சமபந்தியில் இருந்து உணவுண்ணும் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் ஏற்கெனவே வைரலாகி வந்திருந்தன.

இந்த உணவுப் பட்டியலானது மதுரன் மட்டன் கறி தோசை, முட்டை தோசை, மைசூர் மசால் தோசை, பொடி தோசை, வெங்காய தோசை, கொய்யாக்காய் சட்னி, கோவைக்காய் சட்னி, நிலக்கடலை சட்னி, தேங்காய் சட்னி, சாம்பார், சாமை அரிசி தயிர் சாதம், மோர் மிளகாய், மாங்காய் ஊறுகாய், சுக்கு பால் ஐஸ்கிரீம், நறுக்கிய பழங்கள், பீடா உள்ளிட்ட பலவும் இடம் பெற்றிருந்தன.

இந்நிலையில் இந்த உணவுகளை சமைத்தவர் தொடர்பில் ஆச்சரியமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதாவது அவர் வேறு யாரும் இல்லை "மெஹந்தி சர்க்கஸ்" படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் தான் எனக் கூறுகின்றனர்.

மேலும் இவர் கீர்த்தி சுரேஷ் நடித்த "பெண்குயின்" திரைப்படத்திலும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இந்நிலையில் தான் "விக்ரம்" படத்தின் சக்சஸ் மீட்டில் உணவு உண்ணும் இடத்தில் கமல் ஹாசன் நிற்கும் போட்டோவை பகிர்ந்த நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் "விக்ரம் சக்சஸ் மீட்டில் சர்வ் பண்ணியது மகிழ்ச்சியாக இருக்கிறது" என கேப்சன் பதிவிட்டும் இருக்கின்றார். இந்த தகவல் தற்போது இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement