• May 07 2024

விஜய் சேதுபதியின் நடிப்புக்கு தேசிய விருதே கொடுக்கலாம்-பாராட்டிய இயக்குநர் ஷங்கர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் எனப் பன்முக திறமை கொண்ட ஒருவராக திகழ்பவரே நடிகர் விஜய் சேதுபதி. தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள இவர் தென்னிந்திய பிலிம்பேர் விருது, விஜய் விருது உள்ளிட்ட பல விருதுகளும் வென்றிருக்கின்றார்.

இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி "தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல்" ஆகிய படங்களில் நடித்திருக்கின்றார். இப்படங்களைத் தொடர்ந்து 4- வது முறையாக "மாமனிதன்" படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார்.

மேலும் முதன்முதலாக யுவன் மற்றும் இளையராஜா ஆகியோர் இணைந்து இப்படத்தில் இசையமைத்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு 2019-ஆம் ஆண்டே முடிந்த நிலையில் கொரோனா உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாக இப்படம் ரிலீஸ் ஆகாமல் இருந்து வந்தது.

தற்போது அனைத்துப் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்த நிலையில் இப்படம் உலகமெங்கும் ரிலீசாகி இருக்கின்றது. இப்படத்தின் சிறப்புக்காட்சி ஒன்று திரையுலகப் பிரபலங்களுக்கு நேற்று வெளியிடப்பட்டு இருந்தது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் ஷங்கர் விஜய் சேதுபதியின் "மாமனிதன்" படத்தைப் பார்த்து ரசித்திருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து அவர் அப்படத்தைப் பற்றியும், விஜய் சேதுபதியினுடைய நடிப்பு பற்றியும் டுவிட்டரில் பதிவு ஒன்றினை இட்டுள்ளார். அதாவது "மாமனிதன் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியை கொடுக்கின்றது. சீனு ராமசாமியின் ஆத்மார்த்தமான பங்களிப்பு மூலம் இது யதார்த்தமான கிளர்ச்சிப் படமாக வந்துள்ளது. விஜய் சேதுபதியின் நடிப்புக்கு தேசிய விருதே கொடுக்கலாம். இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் உணர்வுப் பூர்வமான இசை படத்தோடு ஒன்றித்துப் பயணிக்க வைக்கின்றது" என படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement