தமிழ் சினிமாவில் 2012ம் ஆண்டு வெளியான நான் படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் நடிகராக மாறிய இசையமைப்பாளர் தான் விஜய் ஆண்டனி.இசையமைப்பாளர், பாடகர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவராக இருக்கிறார்
இதைத் தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், சைத்தான், யமன், அண்ணாதுரை, காளி, பிச்சைக்காரன் திமிரு புடிச்சவன் என வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.இந்நிலையில் இவரின் மகளான மீரா வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார் .
அதிகாலையில் 3 மணி அளவில், அவரது தந்தை விஜய் ஆண்டனி மகளின் அறைக்கு வந்த போது அவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, பணியாளர்களின் உதவி உடன் அருகில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மீராவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
தேனாம்பேட்டை போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அவர் மனஅழுத்தத்தில் இருந்ததாகவும், கடந்த சில நாட்களாக இதற்காக அவர் மருந்து எடுத்துக்கொண்டதாகவும் செல்லப்படுகிறது. மேலும், மீரா படித்து வரும் சர்ச் பார்க் பள்ளியிலும் அவரது நண்பர்களிடமும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடித்தி வருகின்றனர்.
இவரது தற்கொலைக்கான காரணம் தெரியாததால், தேனாம்பேட்டை போலீசார், மீராவின் தொலைபேசியை ஆய்வு செய்து அவர் கடைசியாக யாரிடம் பேசினார்...என்ன பேசினார் என்பதை ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது காவேரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு நடைபெற்று வருவதால், அதன் பின் 10 மணி அளவில் மீராவின் உடல் விஜய் ஆண்டனியிடம் ஒப்படைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
Listen News!