• May 08 2024

பிரபல யூடியூபர் TTF வாசன் கைது... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

அதிவேகமாக ரோட்டில் வண்டி ஓட்டி, யூடியூப் பக்கத்தில் அதன் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர் தான் கோவையை சேர்ந்த யூடியூபர் டிடிஎப் வாசன். இவர் ட்வின் த்ரோட்லர்ஸ் என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரது வீடியோக்கள் பைக் ரைடிங்கை விரும்பும் 2கே கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலம்.


மேலும் அடிக்கடி டிடிஎஃப் வாசன் நெடுஞ்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிகவும் வேகமாக பைக்குகளை இயக்குகிறார் என பல்வேறு புகார்கள் எழுந்து, அபராதம் விதித்ததை தாண்டி கைது நடவடிக்கைகளுக்கும் ஆளாகியுள்ளார்.


இந்நிலையில் வாசன் நேற்று முன்தினம் இவர் பைக்கில் கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளார். வாசனுக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதாவது 230கிலோ மீற்றர் வேகத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது இவர் வீலிங் செய்தமையினால் தான் அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. 


இது குறித்த வீடியோக்களும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தன. இதனைப் பார்த்த பலரும் இவரது லைசென்ஸ்சை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் காஞ்சிபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

Advertisement

Advertisement

Advertisement