• Sep 09 2024

மறைந்த நடிகர் மாரிமுத்துவின் புதுவீட்டை திறந்து வைக்கப்போகும் மூன்று பிரபலங்கள் யார் தெரியுமா?- இது தான் அவருடையே ஆசையா?

stella / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களால் நம்பவே முடியாத ஒரு பிரபலத்தின் மரணம் என்றால் அது நடிகர் மாரிமுத்துவின் மரணம் தான். இரண்டு நாட்களுக்கு முதல் காலையில் நன்றாக டப்பிங் பேசி இருந்தவர் திடீரென மூச்சுவிட கஷ்டப்பட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார், ஆனால் அதற்குள் அவரது உயிர் பிரிந்தது.

அவரது மரணத்தை தமிழக ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை, இப்போதும் மக்கள் அவரது வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் முடிந்திருக்க கூடாது கூறி வருகின்றனர்.பல வருடங்களாக சினிமாவில் இருந்தும் எதிர்நீச்சல் தொடர் தான் அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது. அந்த சீரியல் மூலம் அவரின் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்க பட வாய்ப்புகளும் குவிந்தன.


ரஜினியின் ஜெயிலர், கமல்ஹாசனின் இந்தியன் 2, சூர்யாவின் கங்குவா என பிஸியாக நடித்து வந்துள்ளார்.இவருடைய இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாத ரசிகர்கள் இனி சீரியலை எப்படி பார்ப்போம் என்று கதறி வருகின்றனர். இது ஒரு புறம் இருந்தாலும் அடுத்த ஆதி குணசேகரன் யார் என்ற எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் சோசியல் மீடியாவை பரபரப்பாக்கி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மாரிமுத்துவின் கனவு இல்லம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.அதாவது மாரிமுத்து வாங்கிய பிரம்மாண்டமான அந்த வீட்டின் விலையே 1.5 கோடியாக இருக்கிறது.அதில் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்திருந்த மாரிமுத்து மரத்தாலான சிற்பங்கள், பெயிண்டிங் என கலைநயத்தோடு வீட்டை அலங்கரித்துள்ளாராம்.


 இதை எதிர்நீச்சல் பட குழு உட்பட திரை பிரபலங்கள் பலரிடமும் பெருமையாக சொல்லி விரைவில் கிரகப்பிரவேசம் நடத்த போகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.அதுமட்டுமல்லாமல் தன்னுடைய கனவு இல்லத்தை திறந்து வைக்க போகும் மூன்று பிரபலங்களை பற்றியும் தெரிவித்திருக்கிறார். அதன்படி சிவகுமார், சூர்யா, கார்த்தி முன்னிலையில் தான் வீட்டை திறக்க வேண்டும் என்று மாரிமுத்து மிகப்பெரும் கனவு கோட்டை கட்டி இருக்கிறார்.

ஆனால் விதி, அவருடைய இந்த ஆசை நிறைவேறாமல் போய்விட்டது. இருந்தாலும் அவருடைய கடைசி ஆசையை சிவகுமார் குடும்பத்தினர் நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன்படி மாரிமுத்துவின் குடும்பத்தினர் அவரின் இழப்பிலிருந்து மீண்டு வந்த பிறகு இந்த கிரகப்பிரவேச விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement