• Sep 26 2023

போலீசில் ஆஜராகும் சீமான்... சூடு பிடிக்கும் நடிகை விஜயலட்சுமி விவகாரம்... வெளிச்சத்திற்கு வரப்போகும் உண்மை..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்டாயத்தின் பேரில் ஏழு முறை கருக்கலைப்பு செய்ததாக அளித்த புகாரின்பேரில் நடிகை விஜயலட்சுமிக்கு சமீபத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 


அந்தவகையில் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த 2011-ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி  வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . இந்த புகாரின் பேரில் சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் அவரை கைது செய்யவில்லை.


இதனையடுத்து சமீபத்தில் பாலியல் வழக்கில் அவரை கைதுசெய்யக்கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்றப்பட்டுள்ளது . சீமான் கட்டாயத்தின் பேரில் 7 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் விஜயலட்சுமி அப்புகாரில் தெரிவித்துள்ளார்.


பின்னர் விஜயலட்சுமி அளித்த புகாரில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், சீமானிடம் விசாரணை நடத்த கடந்த 9-ம் தேதி ஆஜராகக் கூறி சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், கட்சிப் பணிகளுக்காக வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால், செப்டம்பர் 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜராவதாக சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் சீமான் இன்றைய தினம் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே இன்றைய விசாரணையில் எப்படியும் உண்மை வெளிச்சத்திற்கு வரக்கூடும் என நம்பலாம். 

Advertisement

Advertisement

Advertisement