• May 20 2024

உங்க கணவரை ரொம்ப பிடிச்சிருக்கு அக்கா- ஷாக் கொடுத்த ஷிவின்-மைனா நந்தினி என்ன சொன்னாரு தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 ஆனது ஆரம்பமாகி ஒரு வாரம் கடந்த நிலையில் வைல்ட்காட் என்ட்ரியாக மைனா நந்தினி நுழைந்துள்ளார்.இவர்  ஃபன் பண்ண போகிறேன் என்று வீட்டுக்குள் நுழைந்துள்ளார். இதனால் அவருடைய கேம் எப்படி இருக்கப் போகுதுன்னு பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

கணவர் மற்றும் குழந்தையை விட்டு விட்டு ப்க் பாஸ் நிகழ்ச்சியில் தான் ஏன் பங்கேற்கிறேன் என்பதற்கும் ஆடியோ விஷுவல் மூலமாக விளக்கம் அளித்துள்ளார் மைனா நந்தினி. சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நந்தினி சினிமாவில் ஆச்சி மனோரமா மாதிரி காமெடியில் கலக்க வேண்டும் என விரும்பிகிறேன், அதற்கு இந்த பிக் பாஸ் எனக்கு கூடுதல் சப்போர்ட் கொடுக்கும் என்றே வந்திருக்கிறேன் என்று கூறினார்.


இவர் வீட்டிற்குள் சென்றதும் ஏனைய ஹவுஸ்மேட் செம குஷியில் துள்ளிக் குதித்தனர். அதே போல ஒரு வாரமாக தாங்கள் எப்படி காண்பிக்கப்படுகின்றார்கள் என்பது குறித்தும் கேட்டனர். அதற்கு சில சில பதில்களையும் கூறி வருகின்றார்.

இதில் உங்க கணவரை தனக்கு ரொம்பவே பிடிக்கும் என சிவின் மைனாவை கட்டியணைத்து சொன்ன நிலையில், அவருக்கும் உன்னைத்தான் ரொம்ப பிடிக்கும்னு சொல்லி அனுப்பினார் என மைனா கூறினார் பின்பு  நீ வருவதற்கு முன்னாடியே நான் உங்க வீட்டுக்கு போயிடுவேன் அக்கா என சிவின் செல்லமாக மைனாவிடம் பேச, ஷாக்கான அவர், யோகி நீ துரோகி ஆகிவிடுவியான்னு கேட்பதை போல பேசி விட்டு சிவினுடன் ஜாலியாக விளையாடிய காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.


அத்தோடு மைனாவுக்கு ஏற்கனவே தெரிந்த ரச்சிதா, அமுதவாணன், மகேஷ்வரி, கதிரவன் ஆகியோர் உள்ளே இருப்பதால் இவர்களுடன் தான் தனது பயணத்தை மேற்கொள்வாரா என ரசிகர்கள் கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement