• Sep 13 2024

'ஜெயிலர்' படத்திற்கு குவியும் பாசிட்டிவ் விமர்சனங்கள்... கவின், ரம்யா கிருஷ்ணன் படம் பார்த்துவிட்டு என்ன சொன்னாங்க தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 4-ஆவது முறையாக நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். 


மேலும் இப்படத்தில் ரம்யாகிருஷ்ணன், வசந்த் ரவி, யோகிபாபு, சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, சரவணன், ஜாக்கி ஷெராஃப், விநாயகன், சுனில் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் இன்றைய தினம் உலகம் பூராகவும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. 


இந்நிலையில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் மட்டுமன்றி பிரபலங்களும் தங்களது விமர்சனகளை தெரிவித்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக படம் பார்த்த ஒரு ரசிகர் "நெல்சன் சூப்பர் கம்-பேக் கொடுத்துள்ளார். அனிருத் ஒரே ஃபயர்தான். தலைவர் சொல்லவே வேண்டாம். அவர் காட் ஆஃப் மாஸஸ்" எனத் தெரிவித்துள்ளார்.


அதேபோல் மற்றோர் ரசிகர் "ரஜினியின் இண்ட்ரோ காட்சி, அனிருத்தின் பின்னணி இசை, ரஜினி- யோகி பாபு காம்போ காமெடி சிறப்பாக உள்ளது. பாடல்களும், செண்டிமென்ட் காட்சிகளும் நன்றாக வொர்க்-அவுட் ஆகியுள்ளது" எனக் கூறியுள்ளார்.

வேறொரு தீவிர ரசிகன் கூறுகையில் "நெல்சனுக்காக தான் நான் படம் பார்க்க வந்தேன், தலைவனை எல்லாருமே ஓரம் கட்டி விட்டிறங்க, ஒரு இயக்குநர் படும் கஷ்டம் எனக்கு என்னனு தெரியும். படம் செம ஹிட்டாகும்" எனக் கூறியுள்ளார். 


மேலும் ஒரு ரசிகர் கூறுகையில் "நீங்க எல்லாருமே இந்தப் படத்தை என்ஜாய் பண்ணப் போறீங்க, படம் ஹிட்டோ ஹிட் தான்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று கூட்டத்தோடு கூட்டமாக படம் பார்த்த நடிகை ரம்யா கிருஷ்ணன் கூறுகையில் "படம் சூப்பராக இருக்கு" எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் கவின் கூறுகையில் "படம் ரொம்ப நல்லா இருக்கு, பெர்ஷனலாக ரொம்ப எமோஷனலாக இருக்கு" என மிகவும் உணர்ச்சி பொங்கத் தெரிவித்திருக்கின்றார். இவர்களை போலவே மேலும் பல பிரபலங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement