• May 22 2024

கே.விஸ்வநாத்திற்கு புகழஞ்சலி தெரிவித்த கமல்ஹாசன்.. என்ன கூறியுள்ளார் தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் இணையற்ற இயக்குநராக திகழ்ந்து வந்தவர் இயக்குநர் கே. விஸ்வநாத். தன்னுடைய சினிமாப் பயணத்தில் ஆரம்பத்தில் ஒரு ஒளிப்பதிவாளராக அடியெடுத்து வைத்த விஸ்வநாத் 1965-ஆம் ஆண்டு இயக்குநராக மாறினார். அதன் பின்னர் இவர் இயக்கத்தில் உருவான அனைத்துப் படங்களுமே ஹிட் அடித்தது மட்டுமின்றி பல விருதுகளையும் வாரிக் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


அந்தவகையில் 1983-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி இயக்குநர் கே. விஸ்வநாத் இயக்கத்தில் தெலுங்கில் 'சாகர சங்கமம்' என்ற பெயரிலும், தமிழில் 'சலங்கை ஒலி' என்ற பெயரிலும் வெளியான திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தில் கமல்ஹாசன், ஜெயப்பிரதா, ஷைலஜா, சரத்பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 


கே. பாலசந்தரை அடுத்து கமல்ஹாசன் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இன்னொரு குருவாகவே கே. விஸ்வநாத்தை கருதினார். சமீபத்தில் கூட விஸ்வநாத் உடல்நலக் குறைவு அடைந்ததாக தகவல் தெரிந்ததுமே உடனே அவரைத் தேடிப் போய் பார்த்து நலம் விசாரித்திருந்தார். அதுமட்டுமல்லாது கே. விஸ்வநாத்தின் இயக்கத்திற்கு நடிகர் கமல்ஹாசனும் மிகப்பெரிய ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கலைக்காக பல ஆண்டுகள் வாழ்ந்து வந்த கே. விஸ்வநாத் மரணமடைந்துள்ளார். இவரின் மறைவு செய்தி அறிந்த நிலையில், தனது கைப்பட ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு புகழஞ்சலி செலுத்தி உள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன்.


அதாவது "கலாதபஸ்வி கே. விஸ்வநாத் காரு கலையின் அழியாத்தன்மை குறித்து ஆதியும் அந்தமும் அறிந்தவர். அவரது கலை அவரது மறைவை தாண்டியும் பல நூறு ஆண்டுகள் கொண்டாடப்படும். அவரது கலையின் உன்னதமான ரசிகன் நான் - கமல்ஹாசன்" என அந்த கடிதத்தில் கமல் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் கே. விஸ்வநாத்தை சந்தித்து கமல் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு கமல்ஹாசனின் ரசிகர்களும் தலை சிறந்த இயக்குநரான கே. விஸ்வநாத்தின் மறைவுக்கு தங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement