• May 18 2024

விக்ரம் படத்தின் டைட்டில் பாடல் எந்த பாடலின் காப்பி தெரியுமா?- இப்படி ஒரு தவறை செய்திட்டாரே அனிரூத்

stella / 1 year ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் தான் விக்ரம். இந்தத் திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்ததோடு அனிரூத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

விஜய்சேதுபதி பகத் பாசில் சூர்யா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகிய நாளிலிருந்து இதுவரை ரூ. 200 கோடி வரை வசூல் செய்து விட்டதாக கூறப்படுகின்றது.

மேலும், தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் ரூ. 100 கோடியை கடந்துவிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் பாடல் காப்பி என்று கூறி, பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்துள்ள Amunet (The Hidden One ) பாடலின் இசையை காப்பி செய்து விக்ரம் படத்திற்கு அனிரூத் டைட்டில் பாடலை இசையமைத்துள்ளார் என்று பலரும் இணையத்தில் கூறி வருகிறார்கள்.

அதற்கு ஏற்றாற்போல் Amunet (The Hidden One ) பாடலை போலவே விக்ரம் படத்தின் டைட்டில் பாடலும் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement