• Sep 19 2024

யாரடி நீ மோகினி படத்தின் மொத்த வசூல் எத்தனை கோடி தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி, முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் தனுஷ்.

இவர் நடிகராக மட்டுமன்றி பின்னணி பாடகர், இயக்குனர், பாடலாசிரியர் என தமிழ் சினிமாவை கலக்கி கொண்டுள்ளார்.

இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய மாறன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இது தவிர தற்பொழுது நானே வருவேன், திருச்சிற்றம்பலம், வாத்தி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.

இவ்வாறுஇருக்கையில் தனுஷின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றியடைந்த படங்களில் ஒன்று யாரடி நீ மோஹினி.

இப்படத்தை மித்ரன் ஜவகர் இயக்கியிருந்தார். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார்.

மேலும் இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், யாரடி நீ மோஹினி படம் ரூ. 35 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement