• Jan 19 2025

உலகநாயகன் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?- இத்தனை வீடு வைத்திருக்கின்றாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் பல்வேறு சிறந்த திரைப்படங்களை கொடுத்து பலருக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார் உலக நாயகன் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திமாக அறிமுகமானார்.

தன் பின்னர் பாலசந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்த கமல். நடிப்பு, இயக்கும், தயாரிப்பு, பாடகர், கதாசிரியர் என சினிமாத்துறையிலும் தன்னை அடையாளப்படுத்தி வந்தார்.


கிட்டத்தட்ட 230க்கும் அதிகமாக படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் வெளியாகி இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது.இதனை அடுத்து இவர் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் அடுத்த ஆணடு வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

இந்த நிலையில் இவர் இன்றைய தினம் இவர் தன்னுடைய பிறந் நாளைக் கொண்டாடுகின்றார்.இவருக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு பற்றி தகவல் வெளியாகியுள்ளது.கமலின் சொத்து மதிப்பு 388 கோடி என தகவல் வெளியாகி உள்ளது. 


இவருக்கு சென்னையில் 7 சொத்துகளும், பெங்களூரில் 2 சொத்துக்களும், மங்களூரு, கர்நாடகா, கோவா, மும்பை, லண்டன் உள்ளிட்ட இடங்களில் சொத்துக்கள் உள்ளன. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் வீடு அவரது பரம்பரை சொத்தாகும். இந்த வீட்டை கமல், 60 ஆண்டுகாலமாக பராமரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement