தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குநராக இருந்து வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் அவர் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் தான் விடுதலை. இப்படத்தில் சூரி காவலராகவும், விஜய் சேதுபதி வாத்தியார் பெருமாள் கதாபாத்திரத்திலும் நடித்திருகிறார்.
இப்படமானது இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள நிலையில் கடந்த வாரம் வெளியான முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இரண்டாம் பாகம் இன்னும் 3 அல்லது 4 மாதத்திற்குள் வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கின்றது.
இந்நிலையில் முதல் பாகம் வெளிவந்துள்ள நிலையில், தற்போது வரை படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு ரசிகர்கள் ஆவலோடு வந்து கொண்டிருப்பதால் இதுவரை இந்த படம் 38 கோடி வரை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!