• Jan 18 2025

பிரேம்ஜி கல்யாணத்திற்கு கூட செல்லாத இளையராஜா.. கங்கை அமரன் மீது அப்படி என்ன கோபம்?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

கங்கை அமரன் மகன் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு சகோதரர் பிரேம்ஜி திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த திருமணத்தில் மிகவும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 

திருத்தணி முருகன் கோவிலில் நடந்த இந்த திருமண குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலான நிலையில் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 

இந்த நிலையில் இந்த திருமணத்திற்கு பிரேம்ஜியின் பெரியப்பா இசைஞானி இளையராஜா வரவில்லை என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக இளையராஜா மற்றும் கங்கை அமரன் குடும்பத்தினருக்கு மனக்கசப்பு இருந்ததாக கூறப்பட்ட நிலையில் பவதாரணி மறைவின் போது இரண்டு குடும்பங்களும் மீண்டும் இணைந்ததாக கூறப்பட்டது. 

ஆனால் தற்போது பிரேம்ஜி திருமணத்திற்கு இளையராஜா செல்லவில்லை என்பதை பார்க்கும்போது கங்கை அமரன் மீது இன்னும் இளையராஜாவுக்கு கோபமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இது குறித்து விசாரித்த போது திருமண தினத்தன்று ஒரு முக்கியமான ரெக்கார்டிங் இருந்ததால் இளையராஜா செல்லவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் திருமணத்திற்கு முந்தைய நாள் மணமக்களை தனது வீட்டுக்கு வரவழைத்து பரிசுகள் கொடுத்து தனது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 

எனவே கங்கை அமரன் மீதும் அவரது குடும்பத்தின் மீதும் இளையராஜாவுக்கு மனக்கசப்பு, கோபம் என்பதெல்லாம் வெறும் வதந்தி என்றும் திருமணத்திற்கு முன்பே அவரது ஆசியை மணமக்கள் பெற்று விட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement