• Dec 19 2025

அல்லு அர்ஜுனின் புஷ்பா 2, 9 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

Mathumitha / 1 year ago

Advertisement

Listen News!

அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிக்கா நடிப்பில் வெளியாகிய புஷ்பா 2 தி ரூல் உலகளாவிய கலெக்ஷன் 9 நாட்களிலேயே 1100 கோடியை கடந்துள்ளது. இதுவரை 1100 கோடி கடந்து சென்ற ஆறு இந்தியப் படங்களுக்குள் புஷ்பா 2 இடம் பிடித்துள்ளது.நேற்றைய தினம் அல்லு அர்ஜுன் கைது செய்து ஜாமினில் வெளியில் வந்துள்ளார்.குறித்த செய்தி வசூலினை பாதிக்கும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர்.


இந்நிலையில் இணையதள தரவின்படி, புஷ்பா 2 இப்போது இந்தியாவில் 36.40 கோடி நெட் வசூலை 9வது நாளில் பெற்றுள்ளது, இதனால் அதன் உள்ளூர்த் தொகை 762 கோடி ஆகும். வெளிநாட்டு வசூலில் 195 கோடி பெறப்பட்டு, அதன் உலகளாவிய வசூல் 1106 கோடியை தாண்டி புதிய ஒரு  சாதனையைப் படைத்துள்ளது.


தற்போது இந்தத் தொகை ஷாருக் கான் இன் ஜவான் (1148 கோடி) மற்றும் யஷின் KGF 2 (1208 கோடி) ஆகியவற்றை முறியடித்து இந்த வார இறுதியில் அந்த இலக்குகளை அடைய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement