• Sep 28 2025

இயக்குநர் சிறுத்தை சிவா இன்று பிறந்த நாள்...! ரசிகர்களின் வாழ்த்து மழை...!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சிறுத்தை சிவா இன்று (ஆகஸ்ட் 12) தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


அஜித் ரசிகர்களிடையே சிறுத்தை சிவாவிற்கு ஒரு தனி இடம் உள்ளது. ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘விஸ்வாசம்’ என அஜித்தை நடிப்பில் வைத்து நான்கு வெவ்வேறு பாணியில் இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் குடும்பம் உணர்வுகள் மற்றும் மாஸ் காட்சிகள் பெரும்பாலும் ரசிகர்களை கவர்ந்தன.

சமீபத்தில் வெளிவந்த ‘கங்குவா’ படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்தாலும், விமர்சன ரீதியாகக் குழப்பமான வரவேற்பை பெற்றது. இதையடுத்து, இயக்குநர் சிறுத்தை சிவா தனது அடுத்த படத்திற்கான திட்டங்களில் இருக்கிறார்.


புதிய தகவல்களின்படி, இவர் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் மீண்டும் இணைய உள்ளாராம். ஏற்கனவே ‘அண்ணாத்தே’ படத்தில் இருவரும் சேர்ந்ததுண்டு. இருப்பினும், இந்த புதிய கூட்டணி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.

பட வாய்ப்புகள் மட்டுமன்றி, சிறுத்தை சிவா தற்போது ஒரு படத்துக்கு ரூ.5 கோடி வரை சம்பளம் பெறுகிறார் என திரையுலகில் தகவல்கள் கூறுகின்றன. சில படங்கள் எதிர்பார்த்த அளவில் ஓடாதிருந்தாலும், சிவாவின் மார்க்கெட் தொடர்ந்து மாறாத வகையில் நிலைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement