தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் நடிகர் விஜய், ரசிகர்களின் மனதில் தனித்த இடம் பிடித்தவர். அவரது நடிப்பு, ஸ்டைல், எளிமை மட்டுமல்லாமல், திரையில் அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளும் ரசிகர்களை ஆழமாக பாதிக்கும் வகையில் அமைந்திருக்கும். அதற்கு சமீபத்திய உதாரணமாக, இயக்குநர் ராஜகுமாரன் அளித்துள்ள ஒரு நேர்காணல் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில், நடிகர் விஜய் நடித்த திரைப்படங்கள் குறித்து தனது நேர்மையான கருத்துகளை பகிர்ந்துள்ளார் இயக்குநர் ராஜகுமாரன். அந்த பேட்டியில், “நான் ‘பிகில்’ படம் பார்த்தேன். அந்த படம் எனக்கு பிடிச்சிருந்தது. ஆனால், ‘தெறி’ படத்தைப் பார்க்க எனக்கு சகிக்கல. ரொம்ப குரூரமா இருந்தது. குறிப்பாக விஜய் சாகுற சீன்களை எல்லாம் என்னால பார்க்க முடியவே இல்ல…” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர்,“விஜய் கண்கலங்கினாலே என்னால பார்க்க முடியாது. ஏன்னா விஜய் மேல நமக்கு ஒரு ஈர்ப்பு இருக்கு. அவரு அழுதா பார்க்க முடியல....” என்று உணர்ச்சிபூர்வமாக தெரிவித்துள்ளார். இந்த கருத்துகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Listen News!