சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 74வது வயதிலும் திரைத்துறையில் தொடர்ந்தும் நடித்து வருவதுடன் ரசிகர்களின் ஆதரவையும் தக்கவைத்துள்ளார். இந்த வயதிலும் அவரது ஆற்றல் குறையாமல் இருப்பது அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.
இந்நிலையில், லைகா நிறுவனம் தயாரித்து வரும் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகின்றார் என்பது நாம் அறிந்த விடயம். இப்படத்தில் ரஜினிகாந்துடன் சேர்ந்து பல முக்கிய நடிகர்களும் நடித்துள்ளனர்.
‘கூலி’ பட ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் சத்யராஜ் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் பல வருடங்களுக்கு பிறகு நேரில் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு சத்யராஜ் மனதில் ஒரு இன்ப அதிர்வை ஏற்படுத்தியிருக்கின்றது. மேலும், "74 வயசுலயும் ரஜினி அந்த மிஸ்டர் பாரத் படத்தில பார்த்த மாதிரி தான் இருக்காரு. அந்த ஸ்டைலும் வேகமும் கொஞ்சமும் குறையவே இல்லை" என்றார் சத்தியராஜ். அத்துடன் "ஸ்டைலா நடிக்கிறது easy...ஆனால் ரஜினியைப் போல ஸ்டைலா வாழுறது கஷ்டம்..!" என்றும் கூறியுள்ளார்.
80களில் ரஜினி மற்றும் சத்யராஜ் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக "மிஸ்டர் பாரத்" படம் இவர்களுடைய கூட்டணிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த படத்தில் ரஜினி போட்ட ஸ்டைல் அந்த காலத்திலேயே ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
தற்பொழுது சத்தியராஜ் கூறிய வார்த்தைகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் சத்யராஜ் கூறிய வார்த்தைகள் எளிமையாக இருந்தாலும் அதன் பின்புலத்தில் ரஜினியின் வாழ்க்கைப் பயணம் மற்றும் அவரின் தொலைநோக்கு பார்வை என்பன காணப்படுகின்றன.
Listen News!