• May 19 2024

இயக்குநரின் மகள் என்பதால் தான் அதிதியின் நடிப்பை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனரா?- அருண் விஜய் கூறிய முக்கிய விடயம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், நடிகைகள் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் தான் தமிழ் ராக்கர்ஸ். இத்திரைப்படம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இவர் பிரபல சேனல் உன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.அதில் 

ஏவிஎம் தயாரிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், நடிகைகள் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் தமிழ் ராக்கர்ஸ். இது சோனி லைவ் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தற்போது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.அப்பா சினிமாவில் இருப்பதால், அவர்கள் பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற கூடுதல் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது என்று நடிகர் அருண் விஜய் கூறியுள்ளார்.இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அருண் விஜய் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.


இயக்குநர் சங்கரின் மகள் அதிதி என்பதால், அவரை எல்லோரும் வரவேற்கிறார்கள் என்று கருத்து நிலவுகிறது. உங்கள் அப்பாவும் சினிமாவில் இருப்பதால் இந்த கருத்து குறித்து நீங்கள் கூற விரும்புவது என்று கேட்கப்பட்டது?

அதற்கு அவர் என்னுடைய சினிமாப்பயணத்தை மக்கள் நன்கு அறிவார்கள். அப்பாவின் பெயரை எந்த இடத்திலும் நான் பயன்படுத்தியது கிடையாது. நான் நடிக்கும் படத்தின் கதையை எப்போதும் அப்பா தேர்வு செய்வது கிடையாது. அப்பா என்னிடம் கூறும்போது, நீ தான் மேலே வர வேண்டும் என்று கூறினார். யாராக இருந்தாலும் அவர்களின் திறமையால் தான் சினிமாத்துறையில் நிலைத்து நிற்க முடியும்.


 நமக்கு திறமை இல்லையென்றால் நாம் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கமுடியாது. என்ன தான் அப்பா சினிமாவில் இருந்தாலும், நமது நடிப்பு ரசிகர்களுக்கு பிடித்தால் மட்டுமே, நமது அடுத்த படத்தை ரசிகர்கள் பார்க்க வருவார்கள். இன்னும் சொல்லப்போனால் அப்பா சினிமாவில் இருப்பதால், அவர்கள் பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற கூடுதல் பொறுப்பு நமக்கு வருகிறது. அதனால் ஒவ்வொரு விஷயத்தை பார்த்து பார்த்து செய்கிறேன் என்றார். மேலும் அவர் கூறுகையில், நடிகை அதிதி சங்கருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு திறமை இருப்பதால் தான் ரசிகர்கள் அவரை வரவேற்கிறார்கள் என்றார்.


Advertisement

Advertisement