• Mar 26 2023

சகுந்தலம் படத்திற்காக 30 கிலோ புடவை- 3 கோடி நகைகளை அணிந்து நடித்தாரா சமந்தா?- வெளியாகிய புகைப்படம்

stella / 1 month ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா.கடந்த ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடித்திருந்த 'காத்து வாக்குல ரெண்டு காதல்' மற்றும் மெடிக்கல் கிரைமை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, 'யசோதா' ஆகிய  படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


இந்த இரு படங்களிலுமே தன்னுடைய மாறுபட்ட நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்த சமந்தா, தற்போது புராண கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள, 'சகுந்தலம்' படத்தில், நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியான போது, சமந்தாவின் தோற்றம் மற்றும் நடிப்பு ரசிகர்களை அதிகம் கவர்த்ததோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்தது.


இந்நிலையில் இந்த படம் குறித்து ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. வசுந்தரா டைமண்ட் நிறுவனம் உருவாக்கிய 3 கோடி மதிப்புள்ள ஆபரணங்களை சமந்தா 'சகுந்தலம்' படத்தில் அணிந்து நடித்திருந்ததாகவும், அதே போல் உயர் ரக கற்கள் பாதிக்கப்பட்ட சுமார் 30 கிலோ புடவை அணிந்து சமந்தா ஒரு வாரம் நடித்ததாக கூறப்படுகிறது.


இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாத நிலையில், இது குறித்த புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளத்தில், வைரலாகி வருகிறது. இதில் சமந்தா கண்கவர் அழகியை, வைர நகைகள் மற்றும் ஜொலிக்கும் கற்கள் பதித்த சேலையை அணிந்துள்ளார என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement