• Apr 25 2024

வாரிசு பட வெற்றியினால் தொடர்ந்து படவாய்ப்பினைப் பெற்று வரும் நடிகர் ஷாம்- அடுத்து யாருடன் நடிக்கிறார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் தான் ஷாம். இவர் இதனைத் தொடர்ந்து 12 பி என்கிற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தில் கிடைத்த வரவேற்பையடுத்து உள்ளம் கேட்குமே, இயற்கை, 6 மெழுகுவர்த்திகள் போன்ற பல படங்களில் நடித்திருக்கின்றார்.

அதிலும் இவர் நடிப்பில் வெளியாகிய இயற்கை திரைப்படம் இவரது கெரியரில் முக்கியமான படமாகவுள்ளது. நல்ல கதை அம்சம் கொண்ட படங்களாக மட்டும் தேர்ந்தெடுத்து வருவதால் தான் தனது 20 வருட திரையுலக பயணத்தில் சீரான வேகத்தில் பயணித்து வருகிறார்.


அண்மையில் தளபதி விஜய்யுடன் இணைந்து ‘வாரிசு’ படத்தில் அவரது சகோதரராக ஷாம் நடித்திருந்தார். சமீபத்தில் பொங்கல் பண்டிகை வெளியீடாக ரிலீசான வாரிசு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் அதில் நடித்துள்ள ஷாமின் நடிப்புக்கும் பாராட்டுக்களைத் தேடி தந்துள்ளது.

 அதுமட்டுமல்ல புதிய பட வாய்ப்புகளையும் அவருக்கு பெற்று தந்துள்ளது.அந்தவகையில் தற்போது ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன் இயக்கிவரும் புதிய படத்தில்  நடித்து வருகிறார் ஷாம். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமாரை வைத்து விஜய் மில்டன் இயக்கிய மழை பிடிக்காத மனிதன் படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..


விஜய் மில்டன் படத்தை தொடர்ந்து இன்னும் சில முக்கியமான இயக்குநர்களின் படங்களில் நடிப்பதற்காக நடிகர் ஷாமுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.  வாரிசு படத்தின் வெற்றியில் மகிழ்ந்திருக்கும் ஷாம், இனி வரும் வருடங்களில் தன்னுடைய படங்கள் சீரான இடைவெளியில் வெளியாகும் என உறுதி செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement