பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசொட் , பாக்கியா போனில் மஜுராவுடன் கதைத்துக் கொண்டிருக்கின்றார். அதன்போது மஜூவை ரொம்ப மிஸ் பண்ணுவதாக கூறியிருந்தார். பின்னர் மஜூ தான் வரைந்த படங்களை எல்லாம் பாக்கியவிடம் காட்டினார். அதற்கு பாக்கியா இப்படியே நல்லா பிரெக்டிஸ் பண்ணினால் ஒருநாள் நிச்சயமா பெரிய ஆளாக வருவாய் என்றார்.
அதனைத் தொடர்ந்து ஈஸ்வரி எதையோ யோசிச்சுக் கொண்டிருக்கிறார். அதனைப் பார்த்த கோபி அவருக்கு அருகில் வந்து ஏன் இப்படி சோகமாக இருக்கிறீங்கள் என்றார். அதற்கு ஈஸ்வரி என்னுடன் கதைக்கிறதுக்கு யாரும் இல்லை நான் வேற என்னத்த செய்யுறது என்றார். அவர்கள் கதைத்துக் கொண்டிருக்கும் போது இனியா அவர்களை கவனிக்காமல் செல்லுகின்றாள்.
அதைப் பார்த்த கோபி கொஞ்ச நாளாவே இனியாவிடம் ஏதோ வித்தியாசம் தெரிகிறது என்றார். அதற்கு ஈஸ்வரி அவளுக்கு எங்களோட கதைக்கிறதுக்கு எதுவும் இல்லப் போல என்றார். அதோட வீட்டில இருக்கிற யாருக்குமே ஒருத்தர ஒருத்தர் பார்த்து கதைக்கிறதுக்கும் நேரம் இல்லை என்றார் ஈஸ்வரி.
மறுநாள் காலையில எல்லாரும் ஒன்றா இருந்து கதைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்போது அவர்களின் வீட்டுக்கு பத்திரிக்கை வைக்க சொந்தக்காரர்கள் வந்து நிக்கிறார்கள். அவர்கள் எழில் மற்றும் செழியன் எங்க என்று கேட்டார்கள். பிறகு கோபியின் 2வது திருமணத்தைப் பற்றி கதைத்தார்கள் அதைக் கேட்டவுடன் கோபியின் முகம் மாறிட்டு.அதைத் தொடர்ந்து கோபியும் பாக்கியாவும் இணைந்து விட்டார்களா? என ஈஸ்வரியிடம் கேட்டார்கள். அதைக் கேட்டவுடன் பாக்கியா ரொம்ப கோவப்படுகின்றார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!