• Feb 22 2025

டிராகன் பட வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இணையும் அஷ்வத் -பிரதீப்

subiththira / 17 hours ago

Advertisement

Listen News!

"டிராகன்" படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் மீண்டும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடந்த ஒரு விழாவில், "டிராகன்" திரைப்படத்தின் வெற்றிக்காக பிரதீப் மேடையில் உணர்ச்சிகரமாக நன்றி தெரிவிக்கும் போது அவரின் கண்கள் கலங்கியதாக காணப்பட்டது.

அஸ்வத்தின் இயக்கத்தில் நடிகர் பிரதீப் நடித்திருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. படம் வெற்றி பெறுவதில் முக்கிய காரணியாக இருந்தது அதன் தனித்துவமான கதை மற்றும் கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பு என்பனவாகும்.


வெற்றிக்கான பாராட்டை தெரிவிக்கும்போது, பிரதீப், "அஷ்வத்துடன் பணியாற்றியது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. அவர் கதை சொல்லும் விதமும், கதாபாத்திரங்களை உருவாக்கும் திறமையும் மிகவும் அற்புதமானது. இந்த வெற்றி அவருடைய கடுமையான உழைப்பின் பலன்" என்று கூறினார்.

மேடையில் பேசும்போது, தனது இயக்குநருக்காக நன்றி தெரிவித்த பிரதீப், ஒரு சில விநாடிகள் பேச முடியாமல் உணர்ச்சிவசப்படுவதை ரசிகர்கள் கவனித்துள்ளனர். இது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன் மீண்டும் அஷ்வத்தின் இயக்கத்தில் படத்தினை உருவாக்கி 3 வருடத்திற்குள் வெளியிடப்போவதாகவும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement