• May 02 2024

'அருமை தலைவணங்குகிறேன்'- முக்கிய நடிகரின் படத்திற்குப் பாராட்டிய உதயநிதி- இந்த படம் தான் இன்னும் ரிலீஸ் ஆகவில்லையே

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஹாலிவுட்டில் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் “பாரஸ்ட் கம்ப் திரைப்படம்” .இப்படம் ஆஸ்கார் விருதினைப் பெற்றதோடு இன்று வரை உலக சினிமா ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ள படமாக உள்ளது.

இந்த படத்தினை 25 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் சட்டா எனும் பெயரில் ரீமேக் செய்துள்ளார்.லால் சிங் சத்தா திரைப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 11 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமீர்கான் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதால் இந்தியா முழுவதும் நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தை தமிழில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது என்றும் ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி விட்டது.

இந்நிலையில் படத்தை பார்த்துள்ள உதயநிதி ஸ்டாலின் “ அருமை.. அமீர்கான் சாருக்கு தலைவணங்குகிறேன். இந்த படத்தில் இணைந்திருப்பது பெருமைக்குரிய விஷயம். படக்குழுவுக்கு வாழ்த்துகள்’ என டுவீட் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement