• Mar 10 2025

லண்டனில் இசை மழை பொழிந்த இளையராஜா! – வரலாற்றில் இடம் பிடித்தாரா?

subiththira / 11 hours ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகின் உயிரோட்டமுள்ள இசையமைப்பாளரான இளையராஜா தனது இந்தியன் சிம்பொனி நிகழ்ச்சியை லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கில் வெற்றிகரமாக அரங்கேற்றினார். இந்த இசை நிகழ்ச்சி பல இசை ரசிகர்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது.

இளையராஜா இந்திய திரையுலகில் தனித்துவமாக காணப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவர். இதன் அடையாளமாக இந்திய திரையுலகின் பிரபலமான பாடல்களை ஒரு நேர்த்தியான இசை வடிவில் உலகிற்கு அறிமுகப்படுத்தும் முயற்சியாக இந்தியன் சிம்பொனி உருவாக்கப்பட்டது.


இளையராஜாவின் இனிமையான இசை ரசனையைப் பார்த்து உலகெங்கும் உள்ள பல ரசிகர்கள் உற்சாகமாகக் கமெண்ட் செய்து வருகிறார்கள். இளையராஜாவின் இந்த வரலாற்று நிகழ்ச்சிக்கான பாராட்டுகள் சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றன. பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து கூறியதுடன்  இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். சமூக வலைதளங்களில், “இளையராஜாவின் இசை நேராக இதயத்தைக் தொடுகிறது என்றும் இந்திய இசைக்கு மிகப்பெரிய நம்பிக்கை அளித்த இசை நிகழ்ச்சி” என்றும் பல கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement