• May 09 2024

சிம்பு மாதிரியான பசங்களை பார்த்தவுடனே பிடிக்கும் என்னை பாக்க பாக்க தான் பிடிக்கும்.. ஓப்பனா பேசிய தனுஷ்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களக வலம் வருபவர்கள் தான் சிம்பு மற்றும் தனுஷ்.அதில்் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் சிம்பு.அதே துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தனுஷ்.

மேலும் சிம்பு கோவில், குத்து, மன்மதன், சரவணன், வல்லவன், என்று தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தது போலவே காதல் கொண்டேன், திருடா திருடி, புதுக்கோட்டையில் இருந்து சரவணன், தேவதையை கண்டேன் போன்ற பல படங்களில் நடித்து தன்னை ஒரு முன்னணி நடிகராக நிலைநிறுத்தி கொண்டார் தனுஷ்.

தற்போது சிம்பு வெந்து தணிந்தது காடு மற்றும் 10 தல ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.அதே போல தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் , நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது.இப்படங்களுக்கான ப்ரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் நடிகர் சிம்புவை பற்றி தனுஷ் கூறிய விஷயங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.அதாவது சிம்பு மாதிரியான பசங்களை பெண்களுக்கு பார்த்தவுடனே பிடிக்கும், ஆனால் என்னை போல் இருக்கும் பசங்களை பெண்களுக்கு பார்க்க பார்க்க தான் பிடிக்கும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே இந்த டயலாகை படிக்காதவன் படத்தில் கூறியிருக்கிறார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement