• Jun 16 2024

ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து இப்படி ஒரு பாடலை.. தனுஷ் வெளியிட்ட ‘ராயன்’ அப்டேட்..!

Sivalingam / 3 weeks ago

Advertisement

Listen News!

தனுஷ் நடித்து இயக்கிய திரைப்படம் ‘ராயன்’ என்பதும் அவருடைய ஐம்பதாவது படம் என்பதால் இந்த படத்தில் அவர் கூடுதல் கவனம் செலுத்தி வந்தார் என்பதும் தெரிந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படம் ஜூன் 13ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மே 13ஆம் தேதி இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியானது என்பதும் ஏ ஆர் ரகுமான் இசையமைத்த இந்த பாடல் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக தற்போது இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வரும் 24ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் குறிப்பாக இந்த பாடல் ஒரு கானா பாடல் என்றும் தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை பார்த்ததும் ரசிகர்கள் ஏஆர் ரகுமானிடம் இருந்து ஒரு கானா பாடலா என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தனுஷ், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தனுஷின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement