• Jun 09 2025

தனுஷ் இப்படி ஏமாத்திட்டாரே? ‘ராயன்’ பட அப்டேட்டால் அதிருப்தியில் ரசிகர்கள்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

தனுஷ் நடித்த ‘ராயன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது என்பதை பார்த்தோம். மேலும் இந்த படம் வரும் ஜூன் 13ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரும் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் சற்று முன் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் ‘ராயன்’ படத்தின் பின்னணி இசை பணியை ஏஆர் ரகுமான் முடித்து விட்டதாகவும் விரைவில் ‘ராயன்’ என்ற புயல் வர இருப்பதாகவும் அறிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அவர் மீண்டும் உறுதி செய்யாமல் இந்த அப்டேட்டை கொடுத்துள்ள நிலையில் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

ஏற்கனவே ‘ராயன்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்பு இருப்பதாகவும் தனுஷின் பிறந்தநாளில் அதாவது ஜூலை இறுதியில் இந்த படம் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதை உறுதி செய்வது போல் இன்றைய அப்டேட்டில் தனுஷ் ரிலீஸ் தேதியை குறிப்பிடவில்லை என்பதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி நிச்சயம் தள்ளி போகும் என்று கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

 தனுஷ், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தனுஷின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement