• Sep 19 2024

மறுபடியும் ரசிகர்களிடம் சிக்கி தவிக்கும் அட்லீ-ஆதாரத்துடன் வெளியான விபரம்….!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் டாப் இயக்குநராக விளங்குபவர் தான் இயக்குநர் அட்லீ, இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.

ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார் .அதன்பின் விஜயுடனான பிளாக் பஸ்டர் கூட்டணியை தொடர்ந்து இயக்குநர் அட்லீ பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார்.

இவ்வாறு இருக்கையில் அட்லீ தற்போது நடிகர் ஷாருக் கானை வைத்து லைன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அப்படத்தின் டைட்டில் அறிவிப்பு நேற்று வெளியாகியிருந்தது. இதனிடையே தற்போது இந்த ஷாருக் கான் படத்தையும் அட்லீ காப்பியடித்து எடுத்துள்ளார் நெட்டிசன்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்து தீயாய் பரவி வருகின்றது.

ஆம், நேற்று ஷாருக் கானின் முகம் கூட தெரியாதளவு முகம் முழுக்க பென்டேஜ் சுற்றிக்கொண்டு இருக்கும் லுக்கில் இருந்தார். எனினும் அதை வைத்து தற்போது நெட்டிசன்கள் இதேபோல் இருக்கும் ஹாலிவுட் படத்தை கண்டு பிடித்துள்ளனர்.

1990 ஆம் ஆண்டு Liam Neeson கதாநாயகனாக நடித்த Darkman படத்தின் காப்பி தான் Jawaan திரைப்படம் என கூறிவருகின்றனர். அவர்கள் சொல்லிவருவது போல இரண்டு படத்திலும் ஒரே மாதிரி பென்டேஜ் சுற்றிக்கொண்டு இருக்கும் லுக்கில் தான் உள்ளனர்.

இதனால் தற்போது எப்போதும் போல அட்லீ காப்பியடிக்கப்பட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனை ரசிகர்கள் மோசமாக விமரச்சித்து வருகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement