விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது மாற்றங்களுடன் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது. இந்த சீசன் பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் என்கிற கான்செப்ட்டில் நடத்தப்பட்டது. இதற்காக பிக்பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போட்டு பாய்ஸ் ஒருபுறமும் கேர்ள்ஸ் ஒரு புறமும் விளையாடி வந்தார்கள்.
கிட்டத்தட்ட 50 நாட்களவில் இந்த கேமுக்கு மவுசு இல்லை என்ற நிலையில் வீட்டுக்கு நடுவே போட்ட கோட்டை அளித்து அனைத்து போட்டியாளர்களும் ஒன்றாக விளையாடலாம் என பிக்பாஸ் அறிவித்தார். அதற்கு பிறகு தான் இந்த சீசனில் ஆட்டமே சூடுப் பிடித்தது.
பிக் பாஸில் நடைபெற்ற டிக்கெட் டு பினாலே டாக்கில் ரயான் வெற்றி பெற்று நேரடியாகவே பைனலுக்குள் நுழைந்துள்ளார். மேலும் கடந்த வாரம் எலிமினேஷனில் அருண் மற்றும் தீபக் ஆகியோர் எலிமினேட் ஆகியிருந்தார்கள். இதில் இவர்கள் இருவரின் எலிமினேஷனும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.
தற்போது பிக்பாஸில் சௌந்தர்யா, பவித்ரா, ஜாக்குலின், முத்துக்குமரன், விஷால், ரயான் ஆகிய ஆறு பேருமே பைனல் லிஸ்ட் ஆக தேர்வு ஆகி உள்ளனர். இறுதியாக நடைபெற்ற எலிமினேஷனில் பவித்ரா அல்லது விஷால் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அருண் தீபக் வெளியேறியது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருந்தது.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகி வெளியே சென்ற ஸ்டராங் போட்டியாளரான தீபக்கிற்கு அவருடைய நண்பர்கள் குடும்பத்தினர் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளார்கள். மேலும் அவருடைய குடும்பமும் கேக் வெட்டி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.
Listen News!