• May 05 2024

சாதனை படைக்கும்; விஜய் படத்தின் புதிய பாடல்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இளையதளபதி விஜய்யின் புதிய படம் எப்போது வரும் ,அதன் பாடல்கள் எப்படியிருக்குமெனச் சினிமா உலகின் ரசிகர்கள் காத்திருப்பார்கள். விஜய்யின் வசனங்கள் கொண்டாடப்படும். அவரது பிகில் படத்தின் கப்பு முக்கியம் பிகிலு போன்ற வசனங்கள் மிகப் பிரபலமானவை. இயக்குநர் நெல்சனின் கைவண்ணத்தில் உருவான பீஸ்ட் படம் வசூல் சாதனை படைத்தது.

விஜய்யின் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.இவர்களுடன் செல்வராகவன்,ஸைன் டாம்,யோகிபாபு,ரெடின் கிங்ஸ்லி,கணேஸ்,அபர்ணாதாஸ் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தார்கள். அனிருத்தின் இசையமைப்பில் பாடல்கள் அனைத்துமே ஒரு கலக்குக் கலக்கின.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப் படத்தின் விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியிருந்தது.

வீரராகவன் என்ற பெயரில் விஜய் முன்னாள் இராணுவ வீரராக இப் படத்தில் தோன்றுகின்றார். அவர் வேலைக்காக வரும் மால் தீவிரவாதிகளால் கைப்பற்றப்படுகின்றது. அங்குள்ளவர்களைப் பணயம் வைக்கின்றனர். பின்னர் அங்குள்ள மக்களை விஜய் எவ்விதமாகக் காப்பாற்றுகின்றார் என்பதை நிமிடத்திற்கு நிமிடம் திகில் உடையதாகக் கதை நகர்கின்றது. விஜய்யின் படித்திற்கே உரிய மசாலாப் பாணி சரியாகக் குழைத்து ரசிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பீஸ்ட் படம் 150 கோடி ரூபா செலவில் எடுக்கப்பட்டு 250 கோடி வசூலைப் பெற்றது. தயாரிப்பாளருக்கு 100 கோடி ரூபா இலாபம் காட்டிக் கரைசேர்த்தது. இப் படம் வெளிவருவதற்கு முன்னரே படத்திலுள்ள அரபிக்குத்துப் பாடல் வைரலாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இசையமைப்பாளர் அனிருத் ஜோனிதா காந்தி ஆகியோர் பாடிய இப் பாடலை இளசு முதுமை என வேறுபாடு இல்லாமல் எல்லோருமே கொண்டாடினார்கள்.

ஓல்ட் இஸ் கோல்ட் என்பார்கள். அது போல லாஸ்ற் இஸ் கோல்ட் என இன்றளவும் அரபிக்குத்துப் பாடலை யயூடியூப் வலைத்தளத்தில் 150 மில்லியன் ( 15 கோடி ) ரசிகர்கள் பார்த்துக் கொண்டாடி உள்ளனர் என்றால் அதன் மவுசைப் பாருங்களேன்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement