• Apr 19 2024

இணையத்தில் லீக்கான துணிவு படத்தின் 'சில்லா சில்லா' பாடல்- அதிர்ச்சியில் படக்குழு!

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குனர் எச்.வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில், அஜித் குமார் மூன்றாவது முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'துணிவு'.வாங்கி கொள்ளையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இதுவரை ரிலீஸ் தேதி குறித்த தகவல் அதிகார பூர்வமாக வெளியிடப்படாத நிலையில், பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் தளபதி விஜய்யின் 'வாரிசுக்கு' முன்பே இந்த படத்தை வெளியிட படக்குழு தயாராகியுளளதாக கூறப்படுகிறது. 


மேலும் இந்த படத்தின் புரொமோஷன் பணிகள் ஒரு புறம், பரபரப்பாக நடந்து வரும் நிலையில், 'துணிவு' படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் பாடலான 'சில்லா சில்லா' பாடல், வரும் 9 ஆம்  தேதி வெளியாக உள்ளதாக படக்குழு சமீபத்தில் தெரிவித்தது.

இந்த பாடலை வரவேற்க படக்குழு, மிகவும் பரபரப்பாக தயாராகியுள்ள நிலையில்... 'சில்லா சில்லா' பாடல் 10 செகண்ட் கொண்ட காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி, படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.





Advertisement

Advertisement

Advertisement