• May 20 2024

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இத்தனை கோடியா..? திரைப்படங்கள் மூலமாகக் கூட இந்தளவிற்குப் பெற முடியாதே... ஆச்சரியத்தில் பிரபலங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சல்மான் கான். இவரின் திரைப்படங்களை பொறுத்தவரையில் மற்ற நடிகர்களைப் போல் அல்லாமல் இந்தியளவில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாவது வழக்கமாக உள்ளது. ஹிந்தி திரையுலகில் இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு.


எனினும்  கடைசியாக வெளியான அவரின் 'ராதே, Antim' உள்ளிட்ட திரைப்படங்கள் படுதோல்வி அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதுதவிர சிரஞ்சீவி உடன் சல்மான் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'Godfather' என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் சல்மான் கான் திரைப்படங்களின் மூலம் எந்தளவிற்கு பிரபலமாகி இருக்கின்றாரோ அதே அளவிற்கு அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பிரபல்யமாகி இருக்கின்றார். அதிலும் குறிப்பாக 'பிக்பாஸ்' நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்களிடையே பெரியளவில் பிரபலமாகி இருக்கின்றார். இதனைத் தொடர்ந்து தமிழிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகின்றார்.

சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகின்ற பிக்பாஸ் நிகழ்ச்சியானது 15 சீசன்களை வெற்றிகரமாக கடந்திருக்கின்றது. மேலும் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 16 விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு இதில் பங்கேற்கவுள்ள நட்சத்திரங்கள் குறித்து தொடர்ந்து தகவல்கள் பரவி வந்த வண்ணமே இருக்கின்றன.


இந்நிலையில் பிக்பாஸ் 16 ஐ தொகுத்து வழங்க நடிகர் சல்மான் கான் இற்குப் பேசப்பட்டுள்ள சம்பளம் குறித்து தகவல் ஒன்று வட இந்தியாவில் பரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக நடிகர் சல்மான் கானுக்கு ரூ. 1000 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.

தென்னிந்தியாவின் திரைப்படங்கள் கூட ரூ. 1000 கோடியை உலகளவில் வசூலாக எடுத்து வரும் நிலையில் ஒரு நடிகருக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இவ்வளவு சம்பளமா என இணையதள வாசிகள் விவாதித்து வருகின்றனர். அதுமட்டுமன்றி இத்தகவலை அறிந்த திரைப்பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement