• May 12 2024

நடிகர் சதீஷூடன் இணைந்து நடிக்கும் பிரபல விஜே…சூப்பர் கதையில் கலக்க இருக்கும் பிரபலங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

அறிமுக இயக்குநர் பிரவீன் சரவணன் இயக்கத்தில் சதீஷ் மற்றும் சுரேஷ் ரவி இணைந்து புதிய படத்தில் நடிக்கின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது.

காமெடி ஜானரில் இந்தப் படம் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.இயக்குநர்கள் எஸ்.சரவணன் மற்றும் பாலாஜி மோகன் ஆகியோரிடம் அசோசியேட்டாக பணிபுரிந்த இயக்குநர் பிரவீன் கூறும்போது, “இதை ‘ஃப்ரி-காம்’ என்று அழைக்க விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இது ஒரு வேடிக்கை நிறைந்த கதை மற்றும் இது இன்றைய இளைஞர்களை பிரதிபலிக்கிறது. இந்த ஸ்கிரிப்ட்க்கு சதீஷ் மற்றும் சுரேஷ் இருவரும் பொருத்தமாக இருப்பார்கள் என்று நான் உணர்ந்தேன் - அவர்கள் கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பர்களாக நடிக்கிறார்கள், தற்போது விஜேவாக பணி புரிகின்றனர்.

மோனிகா சின்னகோட்லா மற்றும் மானசா சௌத்ரி ஆகியோர் முறையே சதீஷ் மற்றும் சுரேஷின் ஜோடிகளாக நடிக்கின்றனர். அத்தோடு கருணாகரன், புகழ் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அனைவருக்கும் சமமான முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளன என குறிப்பிடப்படுகின்றது.சூது கவ்வும் போல இந்தப் படத்திலும் டார்க் காமெடி இருக்கிறது. இன்று சென்னையில் பூஜைக்கு பிறகு படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம். நகரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், சென்னையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாகேக இருக்கிறோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement