• May 19 2024

ஆன்லைன் சூதாட்டத்தை நீங்கள் ஊக்குவிக்கலாமா?-விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கிய சரத்குமார்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சரத்குமார். துணை நடிகர், வில்லன் என படிப்படியாக நடித்து, கதாநாயகனாக நட்சத்திர அந்தஸ்தைப் பிடித்த இவர் நடிப்பில் மட்டுமல்லாது விளையாட்டிலும்,உடல் பயிற்சியிலும் ஆர்வம் கொண்டவராக இருக்கின்றார்.

கட்டுக்கோப்பான உடலமைப்பைப் பேணுவதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இவருக்கு, 67 வயதாகிறது என்று சொன்னால் தான் தெரியும் அந்த அளவுக்கு உடலில் கவனம் செலுத்தி வருகிறார். சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் தற்பொழுது அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றார்.

மேலும் தற்பொழுது தளபதி விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வரும் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், நடிகர் சரத்குமார் ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் ரம்மி விளம்பரத்தில் நடித்துள்ளார். இது சோஷியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. லாட்டரி சீட்டு எப்படி அனைத்துவகையான மக்களின் உழைப்பை வாரிச் சுரண்டியதோ, அதன் நவீன வடிவம் தான் ஆன்லைன் ரம்மி விளையாட்டு. இந்த விளையாட்டை விளையாடி பலர் தங்களின் பணத்தை எல்லாம் இழந்து, என்ன செய்வது என்று தெரியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இதனால் பல தரப்பினரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடைசெய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நேரத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த விளம்பரங்களில் நீங்கள் நடிக்கலாமா? ஒரு கட்சியின் தலைவராக இருந்து கொண்டு இதை செய்யலாமா என ரசிகர்கள் விமர்சித்தும் வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

  1. நயன்தாரா பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷாருக்கான்
  2. அந்தப் பையன் ஒல்லியாக இருக்கான் உங்களுக்குள்ள சரிப்பட்டு வராது….உண்மையை உளறிய நடிகை சோனியா அகர்வால்
  3. எனக்கு மிகப்பெரிய பிரச்சனையே தீபிகா தான்-நடிகர் ஷாருகான்
  4. நடிகை ஸ்ரீவித்யாவின் தங்கை ராஜா ராணி சீரியல் நடிகையா..? இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் இதோ..!

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement