• Jan 15 2025

60வதை கொண்டாடும் சங்கர்... பிரமாண்ட இயக்குனருக்கு பிறந்தநாள்...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர். பல இயக்குனர்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத, விஷயங்களை தன்னுடைய படத்தின் மூலம் கொண்டுவந்து உலக சினிமாவையே தமிழ்த் திரையுலகின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு சில இயக்குனர்களில் இவரும் ஒருவர்.


ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி, 1993 ஆண்டு, பிறந்த இவர், இன்று தன்னுடைய 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழகத்தில் அதிக கோவில்களை கொண்டு விளங்கும், தஞ்சை மாவட்டத்தில் பிறந்த இவர்,  எஸ்.ஏ சந்திரசேகரிடம்,  உதவி இயக்குனராக பணியாற்றி பின் இயக்குனராக மாறினார்.இந்த பிரம்மாண்ட இடத்தை, தன்னுடைய கடின உழைப்பின் மூலம் எட்டிப்பிடித்த இயக்குனர் ஷங்கரிடம், துணை இயக்குனர்களாக பணியாற்றி பலர் வெற்றிப்பட இயக்குனராக தங்களுடைய வாழ்க்கையை துவங்கியுள்ளனர்.


ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் ஷங்கர், முதல் படத்திலேயே தன்னுடைய தன்னுடைய சிறந்த படத்தை பதிவு செய்தார். இந்த படத்திற்கு பின் பிரபுதேவாவை வைத்து காதலன் நடிகர் கமல்ஹாசனை வைத்து இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் ,இந்திரன்  என தொடர்ந்து பல வெற்றிப் படங்களை இயக்கினார்.


இன்றளவும் பிரம்மாண்டத்திற்கு பெயர் என்றால் அது சங்கர் தான். இவரின் இயக்கத்தில் வெளியாகும் படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் இயக்குனர் சங்கர் அவர்களுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துவருகின்றனர். 

Advertisement

Advertisement