• May 19 2024

பிகில் பட வில்லன் நடிகர் வீட்டில் நடந்த மோசடி- போலீஸில் புகார் கொடுத்த அவரது மனைவி

stella / 11 months ago

Advertisement

Listen News!


பாலிவூட் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான்  நடிகர் ஜாக்கி ஷ்ரோப். இவர் பாலிவூட்டைத் தவிர தமிழிலும் சில படங்களில் நடித்திருக்கின்றார்.

குறிப்பாக அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார்.இவரது  மனைவி ஆயிஷா, இவர்களுக்கு டைகர் ஷ்ராப் என்ற மகன் இருக்கிறார். அவர் ஹிந்தியில் தற்போது ஹீரோவாக நடித்து வருகின்றார்.


தற்போது ஆயிஷா மும்பையின் Santacruz Police ஸ்டேஷனில் புகார் ஒன்றை அளித்து இருக்கிறார்.

ஆயிஷா மற்றும் குடும்பத்துக்கு சொந்தமான MMA Matrix gymல் ஆலன் பெர்னான்டஸ் என்பவரை Director of Operations ஆக நியமித்து இருக்கின்றனர்.


அவர் நிகழ்ச்சிகள் நடத்துவதாக கூறி 58 லட்சம் ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பதாக தற்போது ஆயிஷா புகார் அளித்து இருக்கிறார்.இது தொடர்பாக IPC பிரிவு 420, 408, 465, 467 மற்றும் 468 ஆகியவற்றில் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement