• May 19 2024

அனல் பறக்கும் பிக்பாஸ் அப்டேட்... கமலிற்கு வழங்கப்போகும் சம்பளம் இத்தனை கோடியா... வியப்பில் ரசிகர்கள்..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.


இதனையடுத்து விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாது இதுகுறித்த அப்டேட்டுகளும் அடிக்கடி வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவிய வண்ணம் தான் இருக்கின்றன. அந்தவகையில் இந்த சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொள்ளப் போவது யார் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக நிகழ்ந்துள்ள நிலையில் தொடர்ந்து சிலரின் பெயர்கள் அடிபட்டு வருகிறது.


மேலும் ஏனைய சீசன்களை போலவே இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளார். மற்ற எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசன் தாறுமாறாக இருக்க வேண்டும் என போட்டியாளர்களை பார்த்து பார்த்து தேர்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சீசனிற்காக கமல் 100கோடிக்கு மேல் சம்பளம் வாங்கப்போவதாக ஏற்கெனவே ஒரு தகவல் வெளியாகி இருந்தது. அந்தவகையில் இந்த சீசனிற்காக கமலிற்கு 130 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்போவதாக கூறப்படுகின்றது.  

Advertisement

Advertisement