• May 19 2024

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ளதால் முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்கள்- அடடே இந்த சீரியல் எல்லாம் முடிவுக்கு வருகின்றதா?

stella / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட 'பிக்பாஸ்' நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக ஆறு சீசன்களை கடந்துள்ளது.இதனை அடுத்து பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளது என்று கூறப்படுகின்றது.மேலும் இந்த முறை, பலரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் என கூறப்பட்டது.

இதை தொடர்ந்து கடந்த இரண்டு மாதமாகவே பிக்பாஸ் சீசன் 7 துவங்க உள்ளது பற்றிய அறிவிப்புகள் அவ்வபோது வெளியாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியின் தொகுப்பாளர்கள், சீரியல் நடிகர்கள்,அப்பாஸ், சோனியா அகர்வால் என பல பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது. இருப்பினும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.


இந்த நிலையில் பிக்பாஸ் ஆரம்பமாகவுள்ளதால் விஜய் டிவி முக்கிய சீரியல்களை முடிவுக்கு கொண்டு வரவுள்ளதாக கூறப்படுகின்றது. அதன் படி பாண்டியன் ஸ்டோர்ஸ், காற்றுக்கென்ன வேலி ஆகிய சீரியல்கள் தான் முடிவுக்கு வரவுள்ளதாம்.

இதில் காற்றுக்கென்ன வேலி சீரியல் முடிவுக்கு வந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருவது என்பது பொய்யாகத் தான் இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement