• Aug 25 2025

அந்த நேரத்தில் தனது கணவன் செய்த வேலை..பிக்பாஸ் சம்யுக்தா வெளிப்படை..!

luxshi / 2 hours ago

Advertisement

Listen News!

பிரபல நடிகையும் தொலைக்காட்சி பிரபலமுமான சம்யுக்தா, தனது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான தருணங்களை சமீபத்திய பேட்டியில் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.


அதாவது, தனது கணவர் வேறொரு பெண்ணுடன் உறவில் இருப்பதாக தகவல்கள் வந்திருந்தாலும், அதை நேரில் பார்த்த வரை உண்மையை உணரவில்லை. 


ஆனால் கொரோனா காலத்தில் அந்த உண்மையை நேரில் பார்த்தபோது, கணவர் அந்த பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை உணர்ந்தார். அந்த நேரத்தில் சம்யுக்தா என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தார்.

இதனை யாரிடம் கூறுவது,  யாரிடம் முறையிடுவது என எந்தத் தேர்வும் எளிதானதாக இல்லை என்று அவர் தெரிவித்தார்.


இந்த கடுமையான நேரத்தில் அவருக்கு ஆதரவு அளித்தவர் தோழி பாவனா.

பாவனாவுடன் மிக நெருக்கமான பழக்கம் இல்லாவிட்டாலும், அந்த நேரத்தில் யாரிடம் பேசுவது தெரியாமல் அவரிடம் இதைப் பகிர்ந்தேன். அவர், ‘கவலைப்படாதே, பொறுமையாக இரு, பார்த்துக்கொள்ளலாம்’ என்று ஆறுதல் கூறினார். அந்த வார்த்தைகள் எனக்கு பெரும் நம்பிக்கையை அளித்தன. உடைந்து போயிருந்த தருணத்தில் பாவனாவின் ஆதரவு என்னை ஆறுதல் படுத்தியது என்றார்.


சம்யுக்தாவின் பேட்டி, தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட புயல் மட்டுமல்லாமல், நட்பின் முக்கியத்துவத்தையும், மன உறவுகளின் ஆதரவையும் வெளிப்படுத்துகிறது.


இந்த வெளிப்படையான பேட்டி சமூக வலைதளங்களில் பரபரப்பையும், சம்யுக்தாவின் தைரியத்திற்கு பாராட்டுகளையும் பெற்றுள்ளது. பாவனாவின் ஆதரவு சம்யுக்தாவுக்கு கடினமான காலகட்டத்தில் ஒரு தூணாக அமைந்ததாக ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.


சம்யுக்தாவின் உருக்கமான வெளிப்பாடு, திருமண உறவுகளில் நம்பிக்கை, பொறுமை மற்றும் நட்பின் மதிப்பை மீண்டும் உணர்த்தும் விதமாக இருக்கிறது.




Advertisement

Advertisement