• Apr 03 2025

‘பாக்கியலட்சுமி’ கோபியின் பூஜையறை பார்த்ததுண்டா.. இதோ வைரல் வீடியோ

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ என்ற சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சீரியலின் நாயகனாக சதீஷ்குமார், கோபி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் அவரது கேரக்டருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் நான்கு வருடங்களாக ஆயிரம் எபிசோடுகளுக்கு அதிகமாக இந்த சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பாக செல்வதுதான் இந்த சீரியலின் சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடித்துள்ள கோபி கேரக்டரில் நடித்துள்ள சதீஷ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ’காலையில் சீக்கிரம் எழுந்து, உடற்பயிற்சி செய்து, ஜிம்முக்கு சென்று வருகிறேன். முன்னாடி மாதிரி சுறுசுறுப்பாக இருக்க முடியவில்லை. வயதாகி கொண்டே வருகிறது, மிஷின்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ரிப்பேர் ஆகி வருகிறது அதை கொஞ்சம் தட்டிக்கொடுத்து சரி செய்து வருகிறேன்.

இன்று நான் சீக்கிரமாக எழுந்து என் வீட்டில் உள்ள பூஜை அறையில் பூஜை செய்து விட்டேன், இதோ பூஜை அறையை காண்பிக்கிறேன்’ என்று அவர் தனது வீடியோவில் பூஜை அறையை காண்பித்துள்ளார். அந்த பூஜை அறையை பார்க்கும் போது ஒரு மத  நல்லிணக்கத்தை கொண்ட பூஜை அறை போல் தெரிகிறது. ஏனெனில் அதில் இந்து கடவுள்கள் மட்டுமின்றி இயேசு கிறிஸ்து உள்பட நம் பிற மத கடவுள் சிலைகளும் இருந்தது

சிவராத்திரி விரைவில் வருவதால் பூஜை அறையை சிறப்பாக அலங்கரித்துள்ளதாக தெரிவித்துள்ள சதீஷ், சிலுவையும் எனக்கு பிடிக்கும். எல்லாமே கடவுள் தான், நாம் எல்லோரும் கடவுளின் குழந்தைகள் தான், எம்மதமும் சம்மதம்’ என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது


Advertisement

Advertisement