• Jan 19 2025

ஜெனிக்கு பாக்கியா கொடுத்த கடும் அட்வைஸ்.. அடங்கிப் போன ஈஸ்வரி

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ராமமூர்த்தி இனியாவுக்கும் ஜெனிக்கும் தான் முதன் முதலாக ஈஸ்வரியை தியேட்டருக்கு கூட்டிப் போன சம்பவத்தை பற்றி சொல்லிக் கொண்டிருக்க ஜெனி ஃபோனையே நோண்டிக் கொண்டிருக்கிறார். ராமமூர்த்தி கதை சொல்லி முடித்து போன பிறகு இனியா ஜெனியிடம் போன்ல என்ன பார்த்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்க, செழியன் லைவ் லொகேஷன் அனுப்பினான் அதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லுகிறார். இதை இனியா பாக்கியாவிடம் சொல்கிறார்.

மறுபக்கம் ஈஸ்வரி மயூவிடம் சிப்ஸ் சாப்பிடுறியா? என்று கேட்டு, சந்தோஷமாக கதைத்துக் கொண்டிருக்கிறார். அந்த இடத்திற்கு வந்த கமலா இவ கூட கதைக்காத என்று சொல்லி மயூவை உள்ளே அனுப்புகிறார். அதன் பிறகு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை போட்டுக் கொண்டிருக்க அந்த இடத்திற்கு ராதிகாவும் கோபியும் வந்து என்ன நடந்தது என்று கேட்க, இருவரும் ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டு ரூமுக்கு செல்கின்றார்கள். ஈஸ்வரியும் கோபியிடம் ஒன்றும் சொல்லவில்லை.


ராதிகா கமலாவிடம் என்ன நடந்தது என்று கேட்க, முதலில் ஒன்றும் இல்லை என்று சொன்னவர் அதற்குப் பிறகு அந்த அம்மா வழமை போல வாய் போட்டுச்சு நானும் பேசிப் போட்டேன் என்று சொன்னார்.

இதை தொடர்ந்து பாக்கியா, அமிர்தா, ஜெனி மூவரும் கிச்சனில் இருக்க ஜெனி இன்றைக்கு தான் நன்றாக தூங்கினேன் பாப்பா இன்னைக்கு தான் தூங்க விட்டா என்று சொல்லுகிறார். அதன் பிறகு பாக்கியா வாக்கிங் போக ஜெனியையும் கூட வருமாறு கேட்கிறார்.

ஜெனி வாக்கிங் போவதற்கு டிரெஸ்ஸை மாற்றி விட்டு வர செழியன் அதை பார்த்து அசந்து நிற்கிறார்.  பாக்கியாவும்  கண்ணே பட்டுரும் என்று சொல்லுகிறார்.

இதை அடுத்து இருவரும் வாக்கிங் போய்க் கொண்டிருக்க பாக்கியா, ஜெனியிடம் நீ ஏதாவது படிக்க போறியா? வேலைக்கு போக போறியா? என்று பக்குவமாக பேசுகிறார். ஜெனியும் நான் சும்மா இருப்பதால் தான் செழியன் பற்றி யோசித்துக் கொண்டே இருக்கிறேன் என்று சொல்லி நான் யோசிக்கிறேன் என சொல்லுகிறார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement