• Jan 19 2025

20 வருடங்களுக்கு முன் குழந்தை நட்சத்திரம்.. இன்று ஸ்காட்லாந்தில் பட்டம்.. என்ன ஒரு முன்னேற்றம்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

20 வருடங்களுக்கு முன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் அதன் பின் சில படங்களில் நடித்த நிலையில் தற்போது ஸ்காட்லாந்தில் பட்டம் பெற்றுள்ள புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

விக்ரம் நடித்த ’காசி’ என்ற திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சனுஷா, அதன்பின் அவர் தமிழில் ’சுந்தரா டிராவல்ஸ்’ ’பீமா’ ’ரேணிகுண்டா’ ’நாளை நமதே’ ’எத்தன்’ ’அலெக்ஸ் பாண்டியன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். சசிகுமார் நடித்த ’கொடிவீரன்’ திரைப்படத்தில் அவருடைய தங்கை கேரக்டரில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது கூட அவர் இரண்டு மலையாள படங்களில் நடித்து வரும் நிலையில் ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் குளோபல் மென்ஸ் ஹெல்த் அண்ட் சொசைட்டி மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் படிப்பை இரண்டு வருடமாக அவர் படித்து வந்த நிலையில் தற்போது அவர் படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார்.

பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. இரண்டு வருடங்களாக நான் வீட்டை மிஸ் பண்ணினேன், அழுதேன், தூக்கம் இல்லாமல் படித்தேன், சில பார்ட் டைம் வேலைகளையும் செலவுக்காக பார்த்தேன், கடினமான பணி, உடல் நல குறைவு, மன அழுத்தம் ஆகிய அனைத்தையும் கடந்து இன்று பட்டம் பெற்றுள்ளேன். எனக்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.



Advertisement

Advertisement