• Jan 18 2025

பெயர் சொல்லி கூப்பிடுவது பிடிக்காத அட்லீ!1000 கோடி அடிச்ச திமிர்தான் காரணமா? சொன்னது யார் தெரியுமா?

Nithushan / 9 months ago

Advertisement

Listen News!

கடந்த கால சினிமா வரலாறுகளில் நடிகர்கள் , நடிகைகள் பெரிய அளவில் கொண்டாடப்பட்டாலும் இயக்குனர்கள் , இசையமைப்பாளர்கள் போன்று திரைக்கு பின் இருக்கும் கலைஞர்களுக்கு மக்கள் முன்னுரிமை கொடுக்காதிருந்தனர். ஆனால் சமீப காலங்களில் மீடியா துரையின் வளர்ச்சியால் நடிகர்களை விட பல சிறந்த இயக்குனர்கள் தங்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளனர். அவ்வாறு இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் தமிழ் இயக்குனரே அட்லீ ஆவார்.


இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி  பின்பு ஆரியா நடித்த ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ ஆவார். இவர் தொடர்ந்து விஜயை வைத்து தேறி , மெர்சல் , பிகில்  போன்ற திரைப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக இருந்தாலும் ஷாருக்கான் நடிப்பில் இவர் இயக்கிய ஜவான் திரைப்படத்தின் மூலமே இந்திய அளவில் பேசப்பட்டார்.


இந்த நிலையிலேயே இயக்குனர் அட்லீ ஜவான் படம் 1000 கோடி வசூல் செய்து அமோக வெற்றி பெற்றதன் பின்பு தனது பழைய நண்பர்களை பார்க்க விரும்புவதில்லை என்றும் காரணம் அனைவரும் தன்னை சேர் என்று கூப்பிடும் இடத்தில் நண்பர்கள் பெயர் சொல்லி கூப்பிடுவார்கள் என்பதுமே என்று வலைப்பேச்சு அந்தணன் தனது யூடியூப் தலத்தில் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement