ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ என்ற 1000 கோடி ரூபாய் வசூல் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அட்லிக்கு அடுத்த படத்திற்கு ஹீரோ கிடைக்கவில்லை என்பது திரை உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
முதலில் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அந்த படம் டிராப் என்று செய்திகள் வெளியானது. அதனை அடுத்து அட்லி படத்தில் சல்மான்கான் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் கமல்ஹாசன் அல்லது ரஜினிகாந்த் இன்னொரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அந்த படமும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை நோக்கி நகரவில்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இதை அடுத்து ஷாருக்கான் மற்றும் விஜய் ஆகிய இருவரையும் வைத்து ஒரு படத்தை இயக்க அட்லி திட்டமிட்டதாகவும் ஆனால் இருவருமே இப்போதைக்கு இந்த படம் வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து திரைக்கதையை தயார் நிலையில் வைத்திருக்கும் அட்லி ஹீரோ கிடைக்காமல் திண்டாடிய நிலையில் தான் திடீரென அவர் சூர்யாவை பிக்கப் பண்ணியதாக தெரிகிறது.
எனவே அட்லி இயக்கும் அடுத்த படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அனேகமாக இந்த திரைப்படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஷங்கர், தான் இயக்க இருக்கும் ’வேள்பாரி’ என்ற திரைப்படத்தில் சூர்யாவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென சூரியாவை அட்லி பிக்கப் செய்து கொண்டு சென்றது ஷங்கர் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே அட்லியின் அடுத்த பட ஹீரோ யார் என்பது தெரியவரும்.
Listen News!