• Oct 05 2024

சல்மான் கானும் இல்லை.. ரஜினி - கமலும் இல்லை.. பெரிய ஹீரோ கிடைக்காமல் திணறும் அட்லி?

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் சல்மான்கான், கமல், ரஜினி ஆகியோர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி இதுவரை அட்லி படத்தில் நடிக்க யாரும் உறுதி செய்யப்படவில்லை என்றும் குறிப்பாக அவர் பெரிய நடிகரின் கால்ஷீட் வாங்க முடியாமல் திணறிக் கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் அந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப் போகிறது. இருப்பினும் அட்லி அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

கடந்த சில மாதங்களுக்கு முன் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால்  அந்த படம் டிராப் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. இதையடுத்து அட்லி அடுத்த படத்தில் சல்மான் கான் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் ரஜினியும் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. அதன் பின்னர் ரஜினி நடிக்கவில்லை, சல்மான் கான் மற்றும் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.



ஆனால் தற்போது வந்துள்ள தகவல் படி சல்மான் கான், ரஜினி, கமல் உள்பட யாரும் இதுவரை அட்லி படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றும் அட்லி கதையை தயார் நிலையில் வைத்திருந்தும் அவரது இயக்கத்தில் நடிக்க பெரிய நடிகர்கள் முன் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

’ஜவான்’ திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்தும் அட்லிக்கு பெரிய ஹீரோ யாரும் கிடைக்கவில்லை என்பது திரை உலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அட்லி தனது கதைக்கு ஏற்ற வகையில் விரைவில் ஒரு மாஸ் ஹீரோவை தேடி கண்டுபிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement