• Jul 19 2024

செல்வம் முகத்தில் காறி துப்பிய முத்து.. என்ன ஆச்சு நெருங்கிய நட்பு.. வைரல் வீடியோ..!

Sivalingam / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் சின்ன சின்ன நட்சத்திரங்கள் கூட பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இந்த சீரியலில் நாயகன் முத்துவின் நண்பர் செல்வம் கேரக்டரில் நடித்திருக்கும் பழனியப்பன் தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாகிவிட்டார். அவ்வப்போது அவர் பதிவு செய்யும் ரீல்ஸ் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் தற்போது முத்து மற்றும் செல்வம் ஆகிய இருவரும் ஒரு முக்கிய நபரை தேடி வருகின்றனர். அந்த நபர் அவரது பாட்டிக்கு மிகவும் விருப்பத்திற்குரிய நபர் என்பதால் அவரது பிறந்தநாள் பரிசாக அந்த நபரை அவர் கண் முன் நிறுத்த வேண்டும் என்பதற்காக வீதிவீதியாக சுற்றி வருகின்றனர் என்ற காட்சியை சீரியலில் பார்க்க முடிகிறது.

அந்த வகையில் இந்த காட்சிகளின் படப்பிடிப்பின் போது முத்து மற்றும் செல்வம் ஆகிய இருவரும் சேர்ந்து எடுத்த ரீல்ஸ் வீடியோ பழனியப்பன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் ஒரு மொக்க ஜோக்கை பழனியப்பன் கூற, அதனால் கடுப்பான முத்து அவரது முகத்தில் துப்புவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இதற்கு கேப்ஷனாக ’நல்ல வேலை யாரும் பாக்கல’ என்று பழனியப்பன் பதிவு செய்ய, ‘நாங்க பாத்துட்டோம்’ என்று ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த காமெடி வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.



Advertisement

Advertisement