விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய குக்வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபல்யமானவர் தான் அஸ்வின். இதனைத் தொடர்ந்து தற்பொழுது பல ஆல்பம் பாடல்களிலும் திரைப்படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகின்றார்.
அந்த வகையில் இவர் தற்பொழுது இயக்குநர் சாலமோனின் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இவர் தமிழில் மைனா, கும்கி போன்ற ஹிட் படங்களை இயக்கி தனக்கென முத்திரையைப் பதித்து முன்னணி இயக்குநராக வலம் வந்து கொண்டிருக்கிறார்
மேலும் இவர் அஸ்வினை வைத்து இயக்கும் இந்த படமும் மற்ற படங்களைப் போல காடு சார்ந்த கதைக்களத்தைக் கொண்டது தானாம். முழுக்க முழுக்க ஒரு பேருந்தில் நடக்கும் கதை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முழுப் படத்தையும் முடித்துள்ளனர். விரைவில் படத்தின் ரிலீஸ் திட்டமிடப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வரும் மே 20 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!