• Jan 19 2025

மூன்றே மணி நேரத்தில் சூர்யாவின் சாதனையை சுக்குநூறாய் நொறுக்கிய விஜய் புள்ளிங்கோ

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டு ஆரம்பத்தில் முன்னணி நடிகர்களின் படம் பெரிதாக வெளியான ஆகாத நிலையில், தற்போது அடுத்தடுத்து திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன.

கடந்த ஜூலை மாதம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறி உள்ளது. கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேலாக இந்த திரைப்படம் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் ஒரு முடிவுக்கு வந்தது. இதில் உலகநாயகன் கமலஹாசன் நடித்ததோடு பிரபல இயக்குனர் சங்கர் இயக்குவதால் இந்த படம் மீதானே எதிர்பார்ப்பு அதிகமாகவே காணப்பட்டது.

ஆனால் இந்த படம் ரிலீசான பிறகு ரசிகர்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்தியன் தாத்தாவை கதற விட்டு  இருந்தார்கள். அதுமட்டுமின்றி தற்போது இந்த படம் ஓடிடியில் ரிலீசான போதும் அதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி இணையத்தில் காட்சிகளை வைரலாக்கி வருகின்றார்கள்.

இதை தொடர்ந்து சூர்யா நடிக்கும் கங்குவா  படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அதுபோலவே விஜய் நடிப்பில் உருவாகும் கோட் படத்தின் டிரைலரும் நேற்றைய தினம் வெளியானது.

இந்த நிலையில், சூர்யா நடித்த கங்குவா படத்தின் டிரைலரை நேற்றைய தினம் வெளியான விஜய் கோட் பட டிரைலர் வெறும் 3 மணி நேரத்தில் அதனை முறையடித்து சாதனை படைத்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது கடந்த ஐந்து நாட்களில் கங்குவா படத்தின் டிரைலர் வாங்கிய லைக்குகளை, விஜய் நடித்த கோட் படத்தின் டிரைலர்  மூன்று மணி நேரத்தில் வாங்கி அசத்தியுள்ளதாம். தற்போது வரையில் கோட் படத்தின் டிரைலர் 30 மில்லியங்களை கடந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement